யாழில் தொலைபேசி இணைப்பு வயர்களை அறுத்துச் செல்லும் விஷமிகள்.!
[2025-01-16 17:01:50] Views:[120] யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிட்டுப்பட்ட பகுதிகளில் செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொலைபேசி இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் ஒரு தொகுதி வயர் அறுத்துச் செல்லப்பட்டுள்ள போதும் சந்தேகநபர்கள் எவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரைக்கும் அறுக்கப்பட்ட வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.