ஆயிரமாக அதிகரிக்கும் சதொச வர்த்தக நிலையங்கள் ;
[2025-01-19 09:58:00] Views:[140] சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொருட்களின் விலைகளைக் குறைத்து, பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்காக சதொச வலையமைப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சதொச வர்த்தக நிலையங்களின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க பணியாற்றி வருவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் பொதுச் சந்தை வளாகத்திற்கு முன்பாக அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தை புதுப்பித்து திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; 2025 ஆம் ஆண்டுக்குள் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கவும் நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட சதொச வர்த்தக நிலையங்களை திறக்க தயாராக உள்ளோம்.
கடந்த மூன்று மாதங்களில் பொருட்களின் விலைகளை 17% குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 40 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 8% குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.