கல் ஓயா கரை இடிந்து விழுந்ததால் வெள்ளப்பெருக்கு!
[2025-01-20 19:18:30] Views:[242] கல் ஓயாவின் கரைகள் இடிந்து விழுந்ததன் காரணமாக அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கல் ஓயாவை அண்மித்துள்ள பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் நெற்பயிர் செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக திகாவபிய ஜனபதய பகுதிக்கு சொந்தமான பல ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நெல் வயல்களில் பல ஏற்கனவே அறுவடைக்கு தயாராகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.