தங்க விலையில் ஏற்பட்ட மாற்றம்
[2025-01-21 15:24:44] Views:[220] தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதுடன் நேற்று (20) திடீரென வீழ்ச்சியடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
இன்றைய (21) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 809,515 ரூபாவாக காணப்படுவதோடு 22 கரட் தங்க கிராம் 26,180 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 209,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்க கிராம் 28,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 228,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.