இலங்கை பாராளுமன்றத்தில் முதல் முறையாக இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வு..!!
[2025-01-24 21:11:35] Views:[250] இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் நிகழ்வு இன்று வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று காலை பாராளுமன்ற வளாகத்தின் முன்பாக தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
புத்த சாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டலில் தைப்பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பொங்கல் நிகழ்வு இடம்பெற்று அதனை தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருந்தனர்.