கொட்டித்தீர்க்கபோகும் மழை
[2025-01-25 10:19:28] Views:[235] இன்று (25) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சபரக,முவஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 30 - 40 KM வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.