ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டும் புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் - தப்பி ஓடிய பெண்!
[2025-01-26 12:54:34] Views:[239] ஜெனிவா வேலைத்திட்டம் செய்கின்றேன் என்று கூறிக்கொண்டு புலம்பெயர் நாடுகளில் ஒரு கூட்டம் அலைந்து திரிவதாகவும் அவர்களது முழு நேரவேலை தமிழ் மக்களின் அவலங்களை ஜெனிவாவில் வியாபாரமாக்கிப் பணம் சம்பாதிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
இறுதி யுத்தத்தின்போது காணாமல்போண ஒருவரின் மனைவி என்று கூறிக்கொண்டு ஜெனிவா வந்திருந்த பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக ஊடகங்களில் செய்தி பரவுகிறது.
புலம்பெயர் தமிழர்களிடம் காசுசேர்ப்பதற்கு
ஒருசிலர் செய்கின்ற காரியங்கள் நடை பெற்றுக் கொண்டு தான் உள்ளன.
உண்மையான இழப்புக்களுடன் நின்று தவிக்கின்ற மக்களையும், மனித உரிமை விடயங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்ற சில செயற்பாட்டாளர்களையும் எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.