யாழில் இடம்பெற்ற 76 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள்..!!
[2025-01-26 22:30:41] Views:[225] இந்தியாவின் 76வது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மருதடி வீதியில்உள்ள இந்திய துணைத்தூதரகத்தில், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், தூதுவரால் இந்திய தேசிய கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குடியரசு தின வாழ்த்து செய்தியினை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி வாசித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய தேசபக்திப் பாடல்கள்,கவிதைகள் மற்றும் நடனங்கள் என்பன ஆற்றப்பட்டன.
இந்திய தூதரக அதிகாரிகள், ஊடகவியாளர்கள், இராணுவத்தினர், பொஸிஸார் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.