நிலவும் சீரற்ற வானிலையால் மீனவர்கரளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...!!!
[2025-01-27 14:57:36] Views:[131] நிலவும் சீரற்ற வானிலையால் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த அவதானமாக செயல்படுமாறு சுற்றுச்சூழல் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறுவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60KM வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.