yarlathirady.com

விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் உள்நாட்டு விமான போக்குவரத்து..!

[2025-01-28 09:50:01] Views:[220]

நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகல்வல்கள் வெளியாகியுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த கலந்துரையாடலின் போது வசதிகளை மேம்படுத்தவும், பிற சர்வதேச விமான நிறுவனங்களை நமது விமான நிலையத்திற்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

அதன் அடிப்படையில், 2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை எதிர்பார்க்கும் வகையில், அதற்குத் தேவையான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.