தொழு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு
[2025-01-28 14:55:39] Views:[182] சர்வதேச தொழு நோய் தினத்தை முன்னிட்டு விசேட விழிப்புணர்வு நிகழ்வும் தோல் நோய் சிகிச்சையும் இன்று (28) சிறப்பாக நடைபெற்றது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எம் எம் நௌஷாத் தலைமையில் இந்நிகழ்வானது வளத்தாப்பிட்டி கிறேஸ் முன்பள்ளி கட்டிடத்தில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம்.பஸால் , சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை தோல் நோய் பிரிவு வைத்தியர் வைத்தியர் திருமதி உனைசியா , மற்றும் சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் ,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் , உத்தியோகத்தர்கள், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.