yarlathirady.com

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு

[2025-01-28 15:09:44] Views:[150]

இன்று (28) மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.


குறித்த திட்டத்தினை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் ஜப்பானிய நிதி நிறுவனமான ஜெயிக்கா ஆகியன இணைந்து மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் எனும் திட்டத்தின் கீழ் வெற்றிகரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்களுக்கான குறித்த விருதுகள் வழங்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜீ.எம். ஹேமந்த குமார தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளை தொழிலில் உள்வாங்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை தாங்களே அமைத்து கொள்ளும் நோக்கமாக இத் திட்டம் காணப்படுகிறது.


திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 2024 ம் ஆண்டுக்காக சுமார் 17 மாற்றுத் திறனாளிகள் தொழிலில் இணைத்து கொள்ளப்பட்டு தற்போது உரிய பயனாளிகள் குறித்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த நிகழ்வில் வெற்றிகரமாக தெரிவான மாற்றுத் திறனாளிகள், தொழில் வழங்குனர்கள், பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனித வள அபிவிருத்தி உத்திதோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறை சார் உத்தியோகத்தர்கள், தொழில் வழங்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.