பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் கஞ்சா மீட்பு!
[2025-01-28 15:56:34] Views:[242] இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் (28) யாழ்ப்பாணம் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 08 கிலோ கேர்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கும் தகவல்களின்படி சட்டவிரோத போதைப்பொருள் கைதுகள் அதிகமாக இடம் பெருவதுடன், சில தினங்களுக்கு முன்னரும் பலாலி பகுதியில் சுமார் 111 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.