அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்...!!
[2025-01-29 08:57:58] Views:[219] பல அத்தியாவசிய பொருட்களின் மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை வரம்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி வெள்ளை முட்டை, பால்மா, கோதுமை மா, சீனி, பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களுக்கு மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெள்ளை முட்டையொன்றின் விலை 28/= ரூபா முதல் 35/= ரூபாவாகவும்,
400 கிராம் பால்மாவின் விலை 870/= ரூபா முதல் 1,000/= ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் கோதுமை மா 155/= ரூபா முதல் 163/= ரூபாவாகவும்.
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 228/= ரூபா முதல் 245/= ரூபாவாகவும்,
ஒரு கிலோகிராம் பருப்பு 275/= ரூபா முதல் 293/= ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 160/= ரூபா முதல் 180/= ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோகிராம் வெள்ளை அரிசி 210/= ரூபா முதல் 220/= ரூபாவாகவும்,
உள்ளூர் அரிசி 220/= ரூபா முதல் 230/= ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசி 210/= ரூபா முதல் 220/= ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.