இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான விபரம்.
[2025-01-29 10:30:27] Views:[232] நிதி அமைச்சு வாகன இறக்குமதிக்கு அனுமதி தரும் வகையில் நேற்று வர்த்தமானியொன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த வர்த்தமானி தகவல்களின் படி 04 வகையான வாகனங்களுக்கு இறக்குமதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மனகே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கான பஸ்கள், 10–16ஆசனங்களை கொண்ட வேன்கள், லொரி மற்றும் டபல் கெப் வாகனங்கள் இறக்குமதி செய்ய முடியும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.