யாழில் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது..!!
[2025-01-29 22:09:52] Views:[165] இன்று யாழ்ப்பாணத்தில் போதை மாதிரிகைககளுடன் 5 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.
குறித்த சம்பவத்தின் போது பரந்தன் பகுதியில் ஒருவரும் முழங்காவில் பகுதியில் வைத்து நால்வருமாக 5 இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் இருந்து, 40 ஆயிரம் போதை மாத்திரைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.