அத்தியாவசிய உணவுப் பொருட்களின் 5ன் விலை குறைப்பு
[2025-01-30 19:03:29] Views:[149] 5 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (30) முதல் அமலுக்கு வருவதாகவும் லங்கா சதொச தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மா விலை தலா 10 ரூபாயாலும், ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் புதிய விலை 220 ரூபாயாகும் . ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் புதிய விலை ரூ.165 ரூபாயாகும். ஒரு கிலோ கிராம் வெள்ளை சர்க்கரையின் விலை 5 ரூபாயாலும் குறைக்கப்பட்டதால், அதன் புதிய விலை 235 ரூபாயாகும். என தெரிய வருகிறது.