இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் ஆட்சேர்ப்பு..!
[2025-01-31 10:46:39] Views:[231] இலங்கை போக்குவரத்து சபையில் நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு எதிர்வரும் மாதத்தில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சிறப்பு ஆய்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார். பயணிகளுக்கு திறமையான சேவையை வழங்க எதிர்காலத்தில் 1,000 புதிய வசதியான பேருந்துகள் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள சுமார் 75% பயணிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உயர்தர போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.