வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை!
[2025-01-31 11:59:37] Views:[230] தெல்லிப்பழை, பருத்தித்துறை ஆதார மருத்துவமனைகள் ஓரளவு சிறப்பாக இயங்குகின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நெருக்கடிக்களை குறைக்க முடிந்துள்ளது.
எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும். என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று வியாழக்கிழமை (30) வடக்கு மாகாணசபையின் பல்வேறு நிதி மூலங்கள் ஊடாக 10 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்பட்ட பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.