ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்! - அதிகரிக்கவுள்ள தொழில் வாய்ப்பு
[2025-02-01 12:13:43] Views:[184] புதிய 03 கைத்தொழில் மையங்களை வட மாகாணத்தில் அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் (31) இடம்பெற்ற மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில் மையங்களை காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த கைத்தொழில் மையங்களை அமைப்பதன் மூலம் வடமாகணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கான வேளைவாய்ப்பையும் பெற்றுக்க முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.