உடுத்துறையில் "கிளீன் ஸ்ரீலங்கா"
[2025-02-02 19:18:08] Views:[212] இன்று (02) வடமராட்சி கிழக்கு உடுத்துறை பிராந்தியத்தில் "செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூரநோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செயற்றிட்டத்தில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருதங்கேணி பொலிசார் உடுத்துறை 10ம் வட்டாரம் கடற்தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து துப்பரவு பணியை மேற்கொண்டனர்
இந்நிகழ்வில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,உடுத்துறை கடற்தொழிலாளர் சங்க தலைவர் , வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் , வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.