77வது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்.!
[2025-02-02 20:59:27] Views:[241] இம்முறை தேசிய மறுமலர்ச்சியில் இணைவோம் என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்க வளாகத்தில் 77வது சுதந்திர தின விழாவை சிறப்பான முறையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழாவை குறைந்த செலவில், பொதுமக்களுக்கு குறைந்த அசௌகரியத்துடன், அதிக மக்கள் பங்கேற்புடன் நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இராணுவ அணிவகுப்பில் பங்கு பெரும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 1,873 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளத.
சுதந்திர தினத்தன்று நண்பகல் 12.00 மணிக்கு கடலில் கப்பலில் கடற்படையினரால் நடத்தப்படும் பாரம்பரிய 25 துப்பாக்கி வீர வணக்கம் இந்த ஆண்டும் நடைபெறவுள்ளதமை குறிப்பிடத்தக்கது.