முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டங்கள்!
[2025-02-03 10:23:17] Views:[184] உடவளவை வனப்பகுதியில் பயிரிடப்பட்டுவந்த கஞ்சா தோட்டமொன்றை உடவளவை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் முற்றுகையிட்டதாக தெரிய வருகிறது.
இதன்போது, சுமார் 4 அடி உயரம் வரை வளர்க்கப்பட்ட 2,153 கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் 31 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.