சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு..!!
[2025-02-03 21:28:13] Views:[142] 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின விழாவை நாளையதினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சுதந்திர தின நிகழ்விற்காக அரசாங்கம் 80 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி A.H.M.H.அபயரத்ன தெரிவித்துள்ளார்.