யாழில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட 77வது சுதந்திர தின நிகழ்வு.!
[2025-02-04 18:25:39] Views:[261] இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மூவின மக்களின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியானது இன்று (04) காலை 10.30 மணியளவில் யாழ். ஐக்கிய இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில், சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றிருந்தது.
பண்ணை சந்தியில் ஆரம்பமாகி இப்பேரணியானது யாழ். கோட்டை, பொலிஸ் நிலையம் மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள வீதி ஊடாக நகரை வந்தடைத்து, காங்கேசன்துறை வீதி ஊடாக மீண்டும் யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக வந்து நிறைவடைந்தது.
இன, மத வேறுபாடுகளை கடந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இப்பேரணியில் கலந்துக்கொண்டு இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தனர்.
பழங்கால மகிழுந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என பல நூற்றுக்கனக்கான வாகனங்கள் தேசியக்கொடியை காட்சிப்படுத்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.