சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை...!
[2025-02-04 20:56:53] Views:[172] இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் இன்று (04) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் கைதிகள் விடுவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கையின் 77வது சுதந்திர தினமான இன்று ஜனாதிபதியினது பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளர் எனபது குறிப்பிடதக்கது.