பல கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!
[2025-02-05 11:13:09] Views:[147] இந்தியாவிலிருந்து பல கோடி பெறுமதியான "குஷ்" போதைப்பொருளுடன் இலங்கைக்கு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளினால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டொஃபி மற்றும் சொக்லேட் பாக்கெட்டுக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபா பெறுமதியான, 01 கிலோ 40 கிராம் "குஷ்" போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதுடைய சந்தேக நபர் சென்னையில் கையடக்கத் தொலைபேசி வர்த்தகத்தை நடத்தி வரும் வர்த்தகர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.