பட்டதாரிகளுக்கு அரச துறைகளில் வேலைவாய்ப்பு !
[2025-02-05 12:04:51] Views:[113] இலங்கையின் அரசத் துறைகளுக்கு 35,000 பட்டதாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர அறிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் பட்டதாரிகள் தொழில் வாய்ப்புக்களை கோரி போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.