தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நிமிக்க நடவடிக்கை..!
[2025-02-06 08:59:18] Views:[207] தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இது தொடர்பாக தாம் கவலைபடுவதாகவும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே தமிழ் மொழி பேசக்கூடிய மக்கள் வாழும் பிரதேசங்களில் முடிந்தவரை தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு அல்லது சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 5 ஆண்டு ஆட்சி காலத்துக்குள் இதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.