கிளிநொச்சியில் இராணுவத்தினரால் திறந்து வைக்கப்பட்ட சிறுவர் பூங்கா.
[2025-02-06 11:20:47] Views:[152] நேற்றய தினம் கிளிநொச்சி டிப்போ சந்தியிலுள்ள இராணுவ நினைவுத்தூபி வளாகத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் Y.A.B.M யஹாம்பத் அவர்கள் சிறுவர் பூங்காவினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் உட்பட இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.