yarlathirady.com

அரச சேவைகள் டிஜிட்டல் மயமாக்கம்: புதிதாக வரவுள்ள 'GovPay' வசதி.!

[2025-02-07 10:37:47] Views:[153]

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ‘GovPay’ எனும் வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இப் புதிய திட்டத்தின் மூலம் பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாகவும் ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.