ஆபத்தில் இருந்த மீனவருக்கு தக்க சமயத்தில் உதவி செய்த கடற்படையினர்..!
[2025-02-07 11:43:52] Views:[157] திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை கடற்டையினர் தக்க சமயத்தில் பாதுகாப்பக மீட்டுள்ளனர். மீட்டக்கப்பட்ட மீனவர் திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு விபத்துக்குள்ளாகி மீனவர் ஆபத்தான நிலையில் காயமடைந்துள்ளதாக கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், நோய்வாய்ப்பட்ட நோயாளியை தரையிறக்க உதவுவதற்காக கிழக்கு கடலில் பயணம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டு கப்பலான MV SSI Surprise எனும் கப்பலை எச்சரித்தது.
அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை அந்த கப்பலில் ஏற்றிச் சென்று, அடிப்படை முதலுதவி அளித்து, நேற்று காலை கடற்படையின் வேக தாக்குதல் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர். பின்பு கடற்படையினர் காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று அனுமதித்துள்ளர்.