யாழ்ப்பாணத்தில் துவங்கப்படவுள்ள புதிய விமான சேவைகள் தொடர்பான செய்தி..!
[2025-02-10 14:35:20] Views:[109] இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான LCC மற்றும் இண்டிகோ எயார்லைன்ஸ் நிறுவனங்களினால் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமானங்களுக்கான அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை மையமாகக் கொண்டு அண்மையில் வடக்கு ஆளுநர் N.வேதநாயகத்துடன் இண்டிகோ எயார்லைன்ஸ் பிரதிநிதிகள் சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தனர். தற்போது, சென்னையில் இருந்து மட்டுமே யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் இயக்கப்படுகின்ற நிலையில், இரண்டு நகரங்களுக்கிடையில் 25,000 க்கும் மேற்பட்ட வருடாந்திர மக்கள் பயணம் செய்கிறார்கள்.
இண்டிகோ தற்போது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே வாராந்திரம் 54 விமானங்களை இயக்குவதுடன், இந்த விமான நிறுவனம் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையை கொழும்புடன், இணைக்கிறது. இவ்வாறனதொரு பின்னணியில், இண்டிகோவின் பெங்களூரு-யாழ்ப்பாண நேரடி சேவை இந்த சவால்களைத் தீர்க்கும் என்றும் நேரடி விமானங்கள் அதிக நேரத்தைச் செலவழிக்கும் பயணத்தை குறைக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.