நாளையதினமும் மின்வெட்டு தொடரும்: சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு..!
[2025-02-10 21:56:03] Views:[191] நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டியிருக்கும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டை மேற்கொள்ளவுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, மின்வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.