yarlathirady.com

ஆரம்பமான தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு

[2026-04-23 19:06:16] Views:[112]

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாகப் பொதுத்தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி படத்தின் வெளீயீடு தொடர்பான செய்தி..!!
2026-05-25 21:42:18
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இப்படம், பல காரணங்களால் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
'த்ரிஷ்யம் 3' கலெக்சன் இதோ.!
2026-05-22 18:00:16
மலையாள சினிமாவின் மிக முக்கியமான திரில்லர் சீரிஸ்களில் ஒன்றாக பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் மீண்டும் ஜார்ஜ்குட்டியாக திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு
2026-05-15 17:05:23
பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு
காஞ்சனா 4
2026-05-11 17:06:54
காஞ்சனா 4 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
பிரபல தயாரிப்பாளர் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழப்பு..!!
2026-05-05 21:53:50
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இன்று நடந்த வாகன விபத்தில் காலமானார்.