யாழில் தீவுகளுக்கான பயணிகள் படகு சேவை நேரத்தில் மாற்றம்.
[2026-06-01 22:53:10] Views:[53]
ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையிலிருந்து அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற இடங்களுக்காக இடம்பெறும் பயணிகள் படகு சேவைக்கான நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
மாற்றப்பட்ட நேர அட்டவணைக்கமைய அனலைதீவிலிருந்து முற்பகல் 06:00, 07:10, 08:00, 09:00, மதியம் 12:00, பிற்பகல் 02:00, 04:30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி படகு சேவை இடம்பெறும்.
அத்துடன் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07:00, 09:00, பிற்பகல் 12:15, 02:30, 03:45, 04:45, 05:20 ஆகிய நேரங்களில் அனலைதீவிற்கு சேவையில் ஈடுபடும்.
இதேவேளை எழுவைதீவில் இருந்து முற்பகல் 06:15, 07:20, 09:00, 11:45, பிற்பகல் 02:20, 04:30 ஆகிய நேரங்களில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறை நோக்கி சேவையில் ஈடுபடும்.
இந்த நிலையில் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறையில் இருந்து முற்பகல் 07:00, 09:00 பிற்பகல் 12:15, 02:30, 03:45, 05:20 ஆகிய நேரங்களில் எழுவைதீவு நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










