யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய வீதி தொடர்பில் வெளியான அறிவிப்பு
[2026-06-01 23:04:11] Views:[46]
திருநெல்வேலிச் சந்தி ஆடியபாதம் வீதியின் புனரமைப்பு பணிகள் இன்றைய திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி சந்தியிலிருந்து திருநெல்வேலி சந்தை பக்கமாக உள்ள ஆடியபாத வீதியின் ஒரு பகுதி செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரு நாட்களும் ஒரு வழி பாதையாக மாற்றி அமைக்கப்படுகின்றது.
வீதி புனரமைப்பு பணிகளால் ஏற்படுகின்ற போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு குறித்த வீதியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு பகல் நேரங்களில் வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்குவதனை தவிர்த்து இரவு நேரங்களில் பொருட்களை இறக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.










