பரமக்குடி பகுதியில் பாத்திரத்தில் தலையை விட்ட குழந்தை
[2022-08-21 19:48:57] Views:[497] பரமக்குடி அருகே கிளாக்குளம் பகுதியைச் ஒன்றரை வயது அஜித் என்கிற ஒரு ஆண் குழந்தை வீட்டில் சமையல் அறையில் விளையாடிக் கொண்டு அங்கு இருந்த பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்த போது எதிர்பாராத விதமாக அந்த பாத்திரம் அஜித்தின் தலையில் சிக்கிக் கொண்டது பாத்திரத்தை எடுக்க முடியாமல் குழந்தை அலறியதையடுத்து பெற்றோர் அதனை எடுக்க முயற்சி செய்து உள்ளனர்.
அக்குழந்தையின் பெற்றோர் உடனடியாக பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று அங்கு தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை எடுக்க முயன்றனர்.
அந்த முயற்சி கைகொடுக்கவில்லை அதன் பின்னர் பாத்திரத்தை வெட்டி எடுக்க முடிவு செய்து குழந்தைக்கு எந்தவித காயமும் ஏற்பட்டுவிடாமல் பத்திரமாக பாத்திரத்தை வெட்டி அகற்றினர்.