விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
[2025-07-02 19:31:57] Views:[56] விஜய் ஆண்டனிஇப்போது சிறந்த நடிகராகவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார்.
லியோ ஜான் பால் இயக்கத்தில் மார்கன் படத்தில் நடித்துள்ளார்.கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இதில் விஜய் ஆண்டனியுடன் அஜய், சமுத்திரக்கனி, பிரகிடா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர். நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.