கனடாவில் ஏ.ஆர். ரஹ்மான் வீதி
[2022-08-30 12:30:49] Views:[402] கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு A.R Rahman Street பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன், மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
A.R Rahman இது தொடர்பில் தனது முகநூலில் கருத்தொன்றையும் பதிவிட்டுள்ளார்.
வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட செய்து பார்த்தது கிடையாது என முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மார்க்ம் மாநகர மேயர், இந்திய கொன்சோல் அதிகாரி அபூர்வா ஶ்ரீவட்சவா மற்றும் கனேடிய மக்களுக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார். ரஹ்மான் என்ற பெயர் தமது பெயர் அல்ல எனவும் அது கருணையை குறிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் அமைதியையும், சுபீட்சத்தையும், நல்ல ஆரோக்கியத்த்தையும் கனேடிய மக்களுக்கு வழங்க வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.