சாக்லேட் தொண்டையில் சிக்கி 8 வயது மகன் பரிதாபமாக உயிரிழப்பு
[2022-12-01 12:38:44] Views:[517] இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் வெளிநாட்டில் இருந்து தந்தை ஆசையாக வாங்கிவந்த சாக்லேட் 8 வயது மகனின் தொண்டையில் சிக்கிய போது உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இரண்டாம் வகுப்பு மாணவனான அச்சிறுவன் தனது வகுப்பறைக்கு சில சாக்லேட்டுகளை எடுத்துச் சென்று சாக்லேட்டை வாயில் போட்டபோது, அது தொண்டையில் சிக்கிய தாகவும் அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதனால் ஆசிரியர் ஒருவர் பள்ளி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.