20 ஆண்டுகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
[2023-01-17 11:59:00] Views:[430] 20 ஆண்டுகளில் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமான ஓசோனில் காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓட்டை வீழ்ந்தது. அந்த ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என தெரிவிக்கப்படுகிறது.
சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக்கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து எதிர்நோக்கி வருகின்ற. நிலையில், தற்போது வளி மண்டல அடுக்கை அழிக்கும் வான்வழி இரசாயனங்கள் குறைந்து வருகின்றதன் காரணமாக 20 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலம் சீராகும் என்றும் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் 2040 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1980-ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும், ஆர்டிக் துருவம் 2045ம் ஆண்டுக்குள்ளும், அண்டார்டிக் துருவம் 2066ம் ஆண்டுக்குள்ளும், 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.