புவியின் உள் மையமான கோர் ( Core) எதிர் திசையில் சுழலத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது
[2023-02-07 12:17:58] Views:[504] பூமிக்கு உள்ளே ஒரு தனி உலகம் இருப்பதனை கடந்த 1935 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.இயற்கை பேரிடர்களுக்கும் இந்த கோர் பகுதிக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது. எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் போன்றவை ஏற்படுவது இந்த கோர் பகுதி காரணமாகவே ஆகும்.
இதுபற்றி விஞ்ஞானிகள் கண்டிபிடிக்கும்போது பூமியை மூன்றாக பிரித்தார்கள். முதல் பகுதியான நாம் வாழும் பகுதி கிறஸ்ட் என்றும் இரண்டாவது மேன்டில் என்றும் மூன்றாவது மையப்பகுதி கோர் என்றும் அழைக்கிறார்கள். தற்போது மையப்பகுதியான கோர் பகுதி பூமியின் சுற்றுப்பாதைக்கு நேர் எதிராக சுற்றுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
உள் மைய சுழற்சியின் தலைகீழ் மாற்றமானது ஒரு வருடத்தில் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதியால் நாளின் நீளத்தை குறைக்கும் என கூறப்படுகிறதுடன் பூமியின் காந்தப்புலத்தில் சிறிய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பூமியின் மையமானது நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 km கீழே உள்ளது. "கிரகத்திற்குள் உள்ள கிரகம்" என அழைக்கப்படும் இந்த திரவ உலோக மையம் தானாகச் சுழலக் கூடிய அமைப்பாக உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளாக நடைபெற்ற நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகள் வறை ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கங்களிலிருந்து நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தது புவியின் உள் மையத்தின் இயக்கங்களைக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். இவ் ஆய்வின் ஆசிரியர்களான, சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர், உள் மையத்தின் சுழற்சி
2009 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளதாக கண்டறிந்து உள்ளனர்.