கோல்கள் ஐநூறு அடித்து சாதனை - கிறிஸ்டியானோ ரொனால்டோ
[2023-02-11 11:03:55] Views:[464] கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார். அவர் தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பிற்காக விளையாடி வருகிறார் என தெரிவிக்கப் பரகிறது.
வியாழக்கிழமை அல்-வெஹ்தாவுக்கு எதிரான சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நாசர் அணிக்காக களமிறங்கிய ரொனால்டோ ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதன் மூலம் போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.