திருச்சி - மணப்பாறை அருகே என் பூலாம்பட்டியில் 700 காளைகளுடன் களமிறங்கிய ஜல்லிக்கட்டு
[2023-02-11 11:45:15] Views:[436] திருச்சி - மணப்பாறை அருகே என் பூலாம்பட்டியில் 700 காளைகளுடன் களமிறங்கிய ஜல்லிக்கட்டு
திருச்சி - மணப்பாறையை அடுத்த என்.பூலாம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளதாகவும் ர். போட்டியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளதகவும் தெரியவந்துள்ளது
முதலில் கோவில் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட தன் பின்னர் மதுரை, திருச்சி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டது.
அப்போது காளையர்களை காளைகள் விரட்டியும், துரத்தியும் மிரட்டியபோதிலும் களத்தில் விளையாடிய காளைகளை வீரர்கள் விடாமல் திமிலை பிடித்து அடக்க போராடினர்.
இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.