காதலிக்காக 1200 KM நடந்த காதலன்
[2023-02-14 22:06:39] Views:[336] தாய்லாந்தின் Nakhon Nayok நகரில் வசிக்கும் Suthep Maewi Prompit காதலர் தினமான இன்று (14) தனது காதலியை சந்திக்க ஒரு மாதமாக 1,200 கிலோமீட்டர்கள் கால் நடையாக நடந்து சென்று காதலிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
ஜனவரி 14 அன்று தனது சொந்த ஊரிலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்கிய 52 வயதான சுதேப் ப்ரோம்பீத் இன்று ( 14) தாய்லாந்தில் உள்ள சாதுன் என்ற பகுதிக்கு வந்து, அங்கு வசிக்கும் தனது 56 வயதான காதலிக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
இப் பயணம் தனது வருங்கால மனைவியாக இருக்கும் பெண்ணின் மீதான தனது காதலை நிரூபிக்கும் என்றும் அதில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.