மூவர் 11 நாட்களின் பின்னர் உயிருடன் மீண்டு வந்தனர்
[2023-02-18 06:03:12] Views:[350] துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டு 11 நாட்களின் பின்னர் சிறுவன் உள்ளிட்ட மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது.
மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேசமயம், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு துருக்கியில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
சிறுவனை மீட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மற்றொரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 26 மற்றும் 33 வயதுடைய இரண்டு நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.