ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் சிறுமி பலி
[2023-02-19 11:55:29] Views:[391] அதிதி என்ற 14 வயது சிறுமி உத்தரபிரதேச மாநிலம் சோட்டா கிரத்பூர் கிராமத்தை சேர்ந்தவராவார் இச்சிருமி தனது தாயுடன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றபோது ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று சிறுமியை தாக்கியது.
கிராம மக்கள், சிறுத்தையை விரட்டியடித்து படுகாயம் அடைந்த சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என கூறப்படுகிறது.