31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழப்பு
[2023-03-31 09:14:39] Views:[399] பிலிப்பைனிஸின் Lady Mary Joy 3 என்ற கப்பல் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பயணிகள் பதற்றத்தில் கடலில் குதித்துள்ளனர் இதில் மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்ததாகவும் 7 பேர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 230 பேர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.