சினிமாப் பிரியர்களை கவர்ந்த KGF நாயகன் இலங்கையில்! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
[2023-04-13 07:27:03] Views:[481] உலகளவில் சினிமாப் பிரியர்கள் அனைவரையும் கவர்ந்த, KGF நாயகன் யாஷ் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் விமான நிலைய பணியாள்ர்களுடன் எடுத்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்த கே.ஜி.எப் திரைப்படம் பல கோடிகளை வசூலித்து மிகப்பெரிய வெற்றியடைந்ததுடன், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட்டானது.
அதன் பின்னர் அத்திரைப்படத்தின் நாயகன் யாஷ் சினிமா பிரியர்களின் கனவு நாயகனாக மாறிவிட்டார்.